×

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா!

கென்சிங்டன் ஓவல்: இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 44 விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷின் சாதனையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சமன் செய்தார்.

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் டேட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் நேற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் சாய் ஹோப் மட்டுமே 43 ரன்களை எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் குலதீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர், பாண்டியா, முகேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சற்று தடுமாறினாலும் 22.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை சாய்த்ததன் மூலம் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 44 விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷின் சாதனையை சமன் செய்தார்.

கோர்ட்னி வால்ஷி இந்தியாவுக்கு எதிரான தனது 14 ஆண்டு விளையாட்டு வாழ்க்கையில் 38 போட்டிகளில் 44 இந்திய பேட்ஸ்மேன்களை வெளியேற்றியுள்ளார்.ரவீந்திர ஜடேஜா 6 ஓவர்களை வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குலதீப் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

The post வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா! appeared first on Dinakaran.

Tags : Indies ,Kourtney Walshin ,Rawindra Jadeja ,Kensington Oval ,West ,India ,West Indies ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...